உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா என்ற கிராமத்தில் வசித்து தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியான ராம்பால் சிங் என்பவர் இந்த குடும்பத்துக்கு அடிக்கடி தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் வீட்டுக்கே வந்து மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலிஸார் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சத்யபாலுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த தம்பதியினர்காவல் நிலையத்துக்குப் பின்புறம் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை அவர்களது மகன் வீடியோவாக எடுத்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
உடனடியாக அங்கு கூடியப் பொதுமக்கள் அவர்கள் மேல் உள்ள தீயை அணைத்து அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர்கள் உடலில் தீ அதிகளவில் பரவியதால் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் ரவுடியையும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டரையும் போலிசார் கைது செய்துள்ளனர்.