தனக்கு பிறந்த பெண் குழந்தையை தந்தை ஒருவர் ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்துவந்த நெகிழ்ச்சி சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது.
புனே நகரின் ஷெல்கன் பகுதியைச் சேர்ந்த விஷால் ஜரேக்கர் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து முதன்முறையாக வீட்டிற்கு அழைத்துவந்தபோது ஹெலிகாப்டரில் அழைத்துவந்துள்ளார். அவரது குடும்பத்தில் இதுவரை பெண் குழந்தைகளே கிடையாதாம். எனவே தங்களது குடும்பத்தில் முதன்முறையாக பிறந்துள்ள பெண் குழந்தையின் வருகையை சிறப்பிக்கும் விதமாக ஒரு லட்ச ரூபாய் வாடகை கட்டணம் செலுத்தி இவ்வாறு ஹெலிகாப்டரில் அழைத்து வந்ததாக விஷால் ஜரேக்கர் தெரிவிக்கிறார்.
விஷால் ஜரேக்கர் தனது குழந்தையுடன் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.