Skip to main content

பிளாஸ்டிக்கை அறவே ஒதுக்கும் குடும்பம்! - சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முதல் படி..

Published on 05/06/2018 | Edited on 05/06/2018
Plastic

 

உலகம் முழுவதும் ஜூன் 5ஆம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பலரும் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பேச, விழிப்புணர்வு ஏற்படுத்த இன்றைய தினம் சுற்றுச்சூழல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால், இன்று ஒரு தினம் மட்டும் போதுமா? வாழ்நாள் முழுவதும் அதைக் கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது ஒரு குடும்பம்.

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது தண்டேவாடா மாவட்டம். இங்குள்ள ஒரு குடும்பம் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கியக் காரணமான பிளாஸ்டிக் பைகளை அறவே ஒதுக்கி வருகிறது. பசுமையும், சுகாதாரமும் நிறைந்ததாக இந்த பிரபஞ்சம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் இதை செய்து வருகின்றனர். 

 

பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்த பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் படுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர்க் குழாயில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்பட்ட அடைப்பும், அதனால் நிகழ்ந்த பாதிப்புகளும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தை அந்தக் குடும்பத்திற்கு உணர்த்தியிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை என்பதால் தங்களை அடையாளப்படுத்த விரும்பவில்லை எனக் கூறும் அந்தக் குடும்பத்தினர், பிளாஸ்டிக்கைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்; பாதுகாப்பு வீரர்கள் 3 பேர் பலி 

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
3 security personnel were killed at in Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீப காலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகளவு இருந்து வருகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவின் போது கரியாபந்த் தொகுதியில் நக்ஸலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தோ திபெத்திய எல்லை பிரிவைச் சேர்ந்த ஜொகிந்தர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வெடிகுண்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், அதிகப்படியான எல்லைப் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வகையில், கடந்த மாதம் 30ஆம் தேதி அப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினரை நோக்கி நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி  தாக்குதல் நடத்தினர். 

இந்த அதிரடி தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 வீரர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த பாதுகாப்பு வீரர்கள் மீட்கப்பட்டு ராய்ப்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் நக்ஸலைட்டுகள் 6 கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், நக்சலைட்டுகள் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.