oni

Advertisment

மஹாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திர பவாக்கே எனும் விவசாயி தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கத்தரிக்காய் பயிரிட்டு இருந்தார். இதற்காக பாத்தி அமைத்தல், சொட்டுநீர் பாசனம், உரம், பூச்சி கொல்லி மருந்து என ரூ.2 லட்சம் வரை செலவு செய்துள்ளார். விளைந்த கத்தரிக்காய்களை விற்க சந்தைக்கு எடுத்துச்சென்ற பொழுது, அங்கு ஒரு கிலோ கத்தரிக்காய் 20 பைசாவிற்கு விற்றுள்ளது. இதனால் பெரும் நஷ்டமடைந்த அந்த விவசாயி விரக்தியில் தனது மொத்த தோட்டத்தையும் அழித்துள்ளார். கத்தரிக்காய் 20 பைசா விற்கப்படும் நிலையில் வெங்காயம் ஒரு கிலோ 1 ரூபாய் 40 பைசாவுக்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மற்றொரு விவசாயி தனது வெங்காய விளைச்சல்மூலம் கிடைத்த 1064 ரூபாயை பிரதமர் மோடிக்கு அனுப்பி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியள்ளார்.