பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பஞ்சாபில் சாலை வழியாக பயணம் செய்தபோது, போராட்டக்காரர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்துபிரதமர் மோடி, தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சியைரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார். பிரதமர் சென்ற கார் மறிக்கப்பட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்தசூழலில்இந்திய ராணுவத்தில் சீக்கியர்களைநீக்குவது தொடர்பாகபாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகதகவல் வீடியோ ஒன்று வேகமாக பரவ தொடங்கியது. இந்தநிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித் ஷாஉள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இடம்பெற்றிருந்த அந்த வீடியோ போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராணுவத்தில்இருந்து சீக்கியர்களை நீக்குவது போன்ற எந்த ஆலோசனையோ அல்லது கூட்டமோ நடைபெறவில்லை எனவும்மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கிடையே முப்படை தளபதி பிபின் ராவத் மறைவையொட்டி நடைபெற்றபாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டத்தின் வீடியோவில்,கிளப் ஹவுஸ் என்ற சமூகவலைதளத்தில் சிலர் பேசிய ஆடியோவை இணைத்து இந்த போலி வீடியோ பரப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.