/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/teacher_13.jpg)
அரசுப்பள்ளியில் போலி ஆசிரியர் பணியாற்றி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டுஅவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலிமருத்துவர், போலி வழக்கறிஞர் வரிசையில் முதல் முறையாகஅரசுப்பள்ளி ஒன்றில் போலி ஆசிரியர் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அண்டை மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஒடிசாவின்துர்காபூர்அரசு தொடக்கப்பள்ளியில் 27ஆண்டுகளாகச்சரண் என்பவர் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் பணி உயர்வு வழங்கும் பொருட்டு அவரின் சான்றிதழ்களை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பிய போது அது முறையாக வாங்கப்பட்ட சான்றிதழ் இல்லை என்பதை அதிகாரிகள்கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதில், தான் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்இவருக்குப்பணி எந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டது, பணி வழங்க என்ன முறைகேடுசெய்தார், அவருக்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் அனைத்தும் கிடைத்ததும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)