Advertisment

உடலில் தீயசக்தி வெளியேற மாந்திரீக பூஜை; நோயாளியின் உயிரைப் பறித்த போலி சாமியார்!

Fake preacher who performed magic pooja to cure the patient

Advertisment

தெலங்கானா மாநிலம்,மஞ்சிரியாலா மாவட்டம்,சென்னூர் நகரைச் சேர்ந்த தாசரிமது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்ஒரு போலி சாமியார், தாசரிமது உடலில் தீய சக்தி சேர்ந்துள்ளது. அந்த தீயசக்தி அவருடைய உடலிலிருந்து வெளியேறும்வரை உடல்நிலைகுணமாகாது, தீயசக்தியை வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்யவேண்டும்என்று கூற,தாசரிமது குடும்பத்தினர் பூஜை செய்வதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோதாவரி ஆற்றின் அருகே தாசரிமதுவை அழைத்துச்சென்று மாந்திரீக பூஜை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி,அடித்துக் கொடுமைப்படுத்தியதால், தாசரிமது இறந்துபோனார். யாருக்கும்தெரியாமல் அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு போலி சாமியார் திட்டமிட, போலி சாமியார் பூஜை செய்தபோது அங்கிருந்ததாசரிமதுவின் உறவினர் ரகசியமாக செல்போனில் எடுத்த வீடியோவைகாவல்துறைக்கு அனுப்பினார்.

தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்துசென்று, தாசரிமதுவின்உடலைத் தகனம் செய்வதை நிறுத்திவிட்டு, பிரேத பரிசோதனைக்காக உடலை சென்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்,இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து, போலி சாமியார், உடன் இருந்தவர்கள்மற்றும் தாசரிமது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police preachers telungana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe