ADVERTISEMENT

கரோனா இழப்பீடு பெற போலி ஆவணம்- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை

12:16 PM Mar 14, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா இழப்பீடு பெறுவதற்கு போலிச் சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல் கவலையளிக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையை மாநில அரசுகள் அமல்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (14/03/2022) உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் நாகரத்தினா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியைப் பெறுவதற்கு போலிச் சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல் வேதனையளிக்கிறது. நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. கரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசிமாகிறது. கரோனாவால் உயிரிழந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூபாய் 50,000 இழப்பீடு தரச் சொல்லியுள்ளோம். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபாய் 50,000 இழப்பீடு தரச் சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT