/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulancenorn_5.jpg)
போலி மருத்துவர் ஒருவர், நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், டாமோ நகரில் தனியார் மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், பிரபல பிரிட்டிஷ் மருத்துவரான ஜான் கெம் என்பது தான் தனது பெயர் என்று சொல்லி போலி மருத்துவர் போல் ஆள்மாறாட்டம் செய்து, தன்னை ஒரு இதயநோய் நிபுணர் என்று கூறி ஒரு நபர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அவர் இதய அறுவை சிகிச்சையும் செய்து வந்துள்ளார். அதில், 1 மாதத்திற்குள் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாவட்ட புலனாய்வுக் குழு மருத்துவமனையில் இருந்து அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், ​​பிரபல பிரிட்டிஷ் மருத்துவரைப் போன்ற போலி ஆவணங்களை காட்டி ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பதும் அவர் மீது ஹைதராபாத்தில் ஒரு வழக்கு உள்ளது என்பது தெரியவந்தது. இவர் செய்த அறுவை சிகிச்சையால் 7க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட புலனாய்வுக் குழு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)