Advertisment

'போலி நீதிமன்றம்...'-ஒருவர் கைது

 'Fake Court...'-One arrested

போலியாக நீதிமன்றம் செயல்பட்டு வந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

குஜராத்தில்மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியா என்பவர் தான் நீதிமன்ற தலைமையால் அமைக்கப்பட்ட ஒரு மத்தியஸ்தர் எனக்கூறி நீதிமன்றம் போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மனுக்களைப் பெற்று நிலம் தகராறு தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து வந்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நீதிமன்றம் போலவே அலுவலகத்தை உருவாக்கி வழக்குகளை விசாரித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

பெரும் தொகை கொடுப்பவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்து வந்தது தெரியவர, போலி நீதிமன்றம் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து மாரிஸ் சாமுவேல் கிறிஸ்டியாவைகைது செய்த போலீசார் அவரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gujarath court Fake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe