புதுச்சேரியில் நுகர்வோர் தங்களது வழக்குகளை இணையதள வழியாக பதிவு செய்வதற்கான வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டசபை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.சரவணகுமார் இணையதளம் வழியாக நுகர்வோர் வழக்குகளை பதிவு செய்வதற்கான வசதியை கணிணி மூலம் தொடங்கி வைத்தார்.
இன்று முதல் புதுச்சேரியில் நுகர்வோர்கள் தங்களது வழக்குகளை https://edaakhil.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து நிவாரணம் பெறலாம். இந்நிகழ்ச்சியில் துறைச் செயலாளர் உதயகுமார், இயக்குநர் சக்திவேல், மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.