Advertisment

பார்க்காமல் காதல்...பார்த்ததும் கல்யாணம்...அதிர வைத்த சம்பவம்! 

நேரில் பாக்காமல் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த காதலர்கள் நேரில் பார்தததும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. கொல்கத்தாவில் இருக்கும் சுதீப் கோஷல் என்ற இளைஞர் பிரத்திமா பானர்ஜி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நண்பர் ஆகியுள்ளார். இருவரும் பேஸ்புக்கில் பல மாதங்களாக பேசிக்கொண்டு இருந்த நிலையில் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் காதலை பேஸ்புக்கில் சொல்லவில்லை. நேரில் பார்க்கும் போது தங்களது காதலை சொல்லலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை அன்று நடந்துள்ளது. இருவரும் அப்போது எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது சுதீப் தன்னுடைய காதலை பிரத்திமாவிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

lovers

நேரில் காதலன் காதலை சொன்னதும் சற்று தயங்கிய பிரதிமா சிறிது நேரம் யோசித்துள்ளார். பின்பு இருவரும் தனித்தனியே சென்று வீடியோவில் பேசிக்கொண்டு இருந்தனர். உடனடியாக இருவருக்கும் பிடித்து போனதன் காரணமாக துர்கா பூஜை நடைபெற்ற இடத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரதீப் கூறும் போது, "சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது மனநிறைவை கொடுக்கின்றது." என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரத்திமா நான் இங்கு இவரை சந்திப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் கும்பிட்ட தெய்வம் எங்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் இருவீட்டாரின் முன்னிலையில் விரைவில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.

Advertisment
Facebook lovers marriage young girl Young Men
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe