ff

ஃபேஸ்புக் இந்தியா மற்றும் டெல்லி காவல்துறை இடையே நடந்த கூட்டத்தில் குற்றவாளிகளின் தனிப்பட்ட தகவல்களை காவல்துறைக்கு தருவதற்கு ஃபேஸ்புக் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் ஃபேஸ்புக் தொடங்கி 15 வருடங்கள் நிறைவடைகிறது. கடந்த ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் சில பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. அதன் பின் ‘வாட்ச் வீடியோ டூகெதர்’ உள்ளிட்ட பல அப்டேட்களுடன் செயல்பட்டுவருகிறது.

Advertisment

இந்நிலையில் ஃபேஸ்புக் இந்தியா மற்றும் டெல்லி காவல்துறைக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தில் குற்றவாளிகள் குற்றத்திற்காக பயன்படுத்திய தனிப்பட்ட சாட் (chat) விவரங்களை காவல்துறைக்கு வழங்க ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.