Face mask mandatory for pregnant women and elderly in Kerala

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகக் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்து உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டன. இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனையில் படுக்கையின்மை உள்ளிட்ட சவால்களை அரசுகள் எதிர்கொண்டு வந்தன.

Advertisment

இதனிடையே தடுப்பூசி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் இந்திய அரசு வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா தொற்றுஅதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்தமாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் முகக்கசவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதுகேரள மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பிற நோய்கள் உள்ளவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.