‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவரும் உலக துணை தலைவர் பொறுப்பிலும் உள்ள காலின் குரோவல் இன்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் ஆஜரானார்.

Advertisment

fb

சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ட்விட்டர் நிர்வாகத்திற்கும் சம்மன் ஒன்றினை அனுப்பியிருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisment

அன்றையதினம் திட்டமிட்டபடி கூட்டமும் நடந்தது. ஆனால் அதில் ட்வீட்டர் அதிகாரிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. அப்போது ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நாடாளுமன்ற குழு முன் நேரில் ஆஜராக முடியாது எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையில் ட்விட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானம் நிறைவேற்றப்பட்டது அதன் அடிப்படையில் இன்று ‘ட்விட்டர்’ தளத்தின் பொது கொள்கைகளை தீர்மானிக்கும் பிரிவுக்கான தலைவரும் உலக துணை தலைவர் பொறுப்பிலும் உள்ள காலின் குரோவல் ஆஜராகி பதில் அளித்தார்.

மேலும் நிலைக்குழு சார்பில் கேட்கப்பட்டுள்ள பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு பதிலளிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸப் உள்ளிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு மார்ச் 6-ம் தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பி உள்ளது.