publive-image

9 வருடங்களுக்கு முன் காணாமல் போன பெண் மீண்டும் தனது கணவருடன் இணைந்துள்ளார்.

Advertisment

ஹரியானாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு 55 வயதான ஹேகர் சிங் என்பவரின் மனைவி 50 வயதான தர்ஷினி காணாமல் போயுள்ளார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் குடும்பத்தினர் ஒரு புறம் அவரைத் தேடியும்கண்டுபிடிக்க முடியவில்லை.

Advertisment

எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் குடும்பத்திற்கே நம்பிக்கை இல்லாமல் போனது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தன்னார்வ அமைப்பின் ஆதரவு இல்லத்தில் அவர் இருப்பது தெரிய வந்தது. ஆதரவு இல்லத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட தர்ஷினி கடந்த 6 மதங்களுக்கு முன்பிருந்தே குணமடையத் துவங்கியுள்ளார். இதன் பின் அவரிடம் தகவல்களைப் பெற்று மீண்டும் அவரின் குடும்பத்துடன் தன்னார்வ அமைப்பினர் சேர்த்து வைத்துள்ளனர்.

இது குறித்து தர்ஷினியின் கணவர் கூறுகையில், “தன்னார்வ அமைப்பை நடத்துபவரிடம் இருந்து என் மனைவி குறித்து வந்த அழைப்புதான் என் வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு” என்கிறார் பூரிப்புடன்.