/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bjp head quarters.jpg)
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் தற்போது டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதுபோல வெளிநாட்டவர்களான பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்க்யெல் வாங்சக், நேபாள் வெளியுறவுத் துறை அமைச்சர் பிகே கயாவால், இலங்கை வெளியுறவுத் துறை லக்ஷ்மன் கிரியல்லா, வங்கதேசம் வெளியுறவுத் துறை அப்துல் ஹாசன் மஹ்முத் அலி, பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அலி ஜபார் போன்றவர்களும் இன்று டெல்லிக்கு வந்து வாஜ்பாய்க்கு நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Follow Us