இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நாடு முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மூன்றாம் கட்ட தளர்வுகள் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கரோனா பாதிப்பு நிலவரத்தைவைத்து,கட்டுப்பாடுகளைத் தீர்மானித்துக்கொள்ளலாம் எனவும்மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சர்வதேச விமான சேவைக்குவிதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.