உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று டெல்லி - வசீராபாத் செல்லும் சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. போபுரா செளக் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் அடுத்த 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்துள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பயங்கர தீ விபத்தில் தற்போது வரை உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வரவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.