Advertisment

இந்தியாவின் இரண்டாவது கரோனா தடுப்பூசி - அனுமதியளிக்க நிபுணர் குழு பரிந்துரை!

corona vaccine

இந்தியாவில் தற்போதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்குப் பரவலாக செலுத்தப்படுகின்றன. ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்தடுப்பூசிகளைத் தவிர மாடர்னா தடுப்பூசிக்கும், கடந்த ஏழாம் தேதி ஜான்சன் & ஜான்சனின்ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கும் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இதற்கிடையேஸைடஸ் காடிலா என்ற இந்திய நிறுவனம், ‘ஸைகோவி - டி’ என்ற கரோனா தடுப்பூசியைத் தயாரித்து, அவசரகாலஅனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்தது. சில நாட்களுக்கு முன்பு இத்தடுப்பூசியின் சோதனை தரவுகளை ஆய்வுசெய்த நிபுணர்கள், தடுப்பூசி பரிசோதனை தொடர்பான கூடுதல் தரவை சமர்ப்பிக்குமாறு ஸைடஸ் காடிலா நிறுவனத்தைஅறிவுறுத்தினர்.

Advertisment

இந்தநிலையில்இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின்நிபுணர் குழு,‘ஸைகோவி - டி’தடுப்பூசிக்கு அனுமதிக்கு அவசர கால அனுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில்‘ஸைகோவி - டி’தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்தடுப்பூசி கொண்டு செய்யப்பட்ட பரிசோதனையின்கூடுதல் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நிபுணர்குழு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர் குழுவின் பரிந்துரையைஅடுத்து,ஸைடஸ் காடிலாவின்‘ஸைகோவி - டி’தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DCGI coronavirus vaccine zydus cadila
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe