/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Congress-BJP-in.jpg)
தெலுங்கானா, ராஜஸ்தான், உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதையடுத்து, அதில் தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர் ராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அல்லது காங்கிரஸ் வெற்றிபெறலாம் என தெரிகிறது. இந்நிலையில் பா.ஜ.க கூட்டணிக்கான அழைப்பு விடுத்துள்ளது.
அதில் காங்கிரஸ் மற்றும் அசாதுதின் ஒவைசியின் கட்சி தவிர மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என அழைத்துள்ளது. இது சந்திரசேகர் ராவுக்கான நேரடி அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அசாதுதீன் ஒவைசி இன்று சந்திரசேகர் ராவை சந்திக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)