Advertisment

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 547.5 ஜிபி டேட்டாவுடன் ரூ. 5,000 கூப்பன்...! ஜியோ தீபாவளி தமாகா...

ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி தமாகா சலுகையை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் எட்டு சலுகைகளை ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது. தீபாவளி தமாக்காவில் ஜியோ புதிதாக ஒரு வருடத்திற்கு ரூ. 1,699 ரீ-சார்ஜ் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 547.5ஜிபி டேட்டாவும், இலவசமான கால்களும் சேர்ந்துவரும். இந்த 547.5ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா விகிதம் என வழங்கப்படும்.

Advertisment

jio

ஜியோ 100% கேஷ் பேக் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது ரூ. 149 ரீ-சார்ஜ் தொடங்கி அனைத்து வகையான போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேஷ் பேக் ரிலையனஸ் டிஜிட்டல் கூப்பன் வகையில் கிடைக்கும் என்றும், அந்த கூப்பன் ’மை ஜியோ’ செயலியின் மூலமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கேஷ் பேக் திட்டம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த கேஷ் பேக் டிசம்பர் 31, 2018 வரை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன் ரூ. 5,000 மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர்த்து மற்றொரு கேஷ் பேக் சலுகையான ரூ. 2,200 உள்ளது. இது ரூ. 198 மற்றும் ரூ. 299 ஆகிய இரண்டு ரீ-சார்ஜ் திட்டத்திற்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஏதாவது 4ஜி ஃபோனை வாங்கி அதில் பயன்பாட்டில் இருக்கும் ஜியோ ஸிம் அல்லது புதிய ஜியோ ஸிம் என இரண்டு ஸிம்களையும் பயன்படுத்தி இந்த கேஷ் பேக்கை பெறலாம். இதற்கு 30 நவம்பர் 2018-க்குள் ரீ-சார்ஜ் செய்யவேண்டும். இதை தவிர்த்து இன்னும் பல சலுகைகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

offer jio offer jio diwali dhamaka jio
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe