Skip to main content

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 547.5 ஜிபி டேட்டாவுடன் ரூ. 5,000 கூப்பன்...! ஜியோ தீபாவளி தமாகா...

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

 
ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி தமாகா சலுகையை அறிவித்துள்ளது. இதில் மொத்தம் எட்டு சலுகைகளை ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தந்துள்ளது. தீபாவளி தமாக்காவில் ஜியோ புதிதாக ஒரு வருடத்திற்கு ரூ. 1,699 ரீ-சார்ஜ் எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் 547.5ஜிபி டேட்டாவும், இலவசமான கால்களும் சேர்ந்துவரும். இந்த 547.5ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா விகிதம்  என வழங்கப்படும். 

 

jio

 

 

ஜியோ 100% கேஷ்  பேக்  திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது ரூ. 149 ரீ-சார்ஜ் தொடங்கி அனைத்து வகையான போஸ்ட் பெய்ட் மற்றும் ப்ரீ பெய்ட் திட்டத்திற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேஷ்  பேக்  ரிலையனஸ் டிஜிட்டல் கூப்பன் வகையில் கிடைக்கும் என்றும், அந்த கூப்பன் ’மை ஜியோ’ செயலியின் மூலமாக கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கேஷ்  பேக்  திட்டம் ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் இந்த கேஷ்  பேக்  டிசம்பர் 31, 2018 வரை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூப்பன் ரூ. 5,000 மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இதை தவிர்த்து மற்றொரு கேஷ் பேக் சலுகையான ரூ. 2,200  உள்ளது. இது ரூ. 198 மற்றும் ரூ. 299 ஆகிய இரண்டு ரீ-சார்ஜ் திட்டத்திற்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஏதாவது 4ஜி ஃபோனை வாங்கி அதில் பயன்பாட்டில் இருக்கும் ஜியோ ஸிம் அல்லது புதிய ஜியோ ஸிம் என இரண்டு ஸிம்களையும் பயன்படுத்தி இந்த கேஷ்  பேக்கை பெறலாம். இதற்கு 30 நவம்பர் 2018-க்குள் ரீ-சார்ஜ் செய்யவேண்டும். இதை தவிர்த்து இன்னும் பல சலுகைகளை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

 11 மொழிகளில் ஒருநாள் கிரிக்கெட்;  ஜியோ சினிமா இலவச ஒளிபரப்பு!

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

 ODI cricket in 11 languages; Jio Cinema Free Streaming

 

உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.

 

முதலாவது சர்வதேசத் தொடரை ஜியோ சினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோ சினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ்  சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18-1 ஹெச்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 ஹெச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

 

50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. டாடா ஐபிஎல் போட்டி - 2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோ சினிமா தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோ சினிமா டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம்18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.

 

இதுகுறித்து வயாகாம்18 - ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.

 

ஜியோ சினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைத்தளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைத்தளங்களில் Jio Cinema செயலியைப் பின்தொடரலாம்.

 

போட்டி அட்டவணை


செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.

 


 

Next Story

தீபாவளி முதல் இந்தியாவில் ஜியோ 5ஜி சேவை - முகேஷ் அம்பானி 

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

5G in India on Diwali - Mukesh Ambani

 

இந்தியாவில் இன்னும் 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை இணையப் பயன்பாட்டிற்குள் இணைக்க திட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

தீபாவளி முதல் 5ஜி தொழில்நுட்பம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டெல்லி என நான்கு நகரங்களில் கொண்டுவரப்படும் எனவும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகரங்களுக்கு 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும் எனவும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். அடுத்த 18 மாதங்களுக்குள் 100 மில்லியன் வீடுகளை இணைய பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2 லட்சம் கோடி செலவில் இந்தியா முழுவதும் 5ஜி பயன்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதல் கட்டமாக 75000 கோடி முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.