Excitement by a person who tried to break into the home of the National Security Adviser!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயன்ற நபரால் பதற்றம் ஏற்பட்டது.

Advertisment

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் டெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று (16/02/2022) காலை அங்கு வந்த நபர் அஜித்தோவல் இல்லத்திற்குள் நுழைய முயற்சித்துள்ளார். பாதுகாப்பு வீரர்கள் அவரைத் தடுத்த போது, தனது உடலில் சிப் பொருத்தப்பட்டுள்ளதாகவும், தன்னை அதன் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது, உடலில் சிப் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அந்த நபர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. இசட் பிளஸ் என்ற உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர் வீட்டில் அத்துமீறி ஒருவர் நுழைய முயன்றது, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.