Skip to main content

பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய மத்திய அரசு... பொதுமக்கள் அதிர்ச்சி...

Published on 14/03/2020 | Edited on 14/03/2020

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

 

Excise duty on both petrol and diesel increased by Rs 3 per litre

 

 

கரோனா வைரஸ் பரவலால் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மூன்று ரூபாய் உயர்த்துவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக எரிபொருளுக்கான தேவை குறைந்ததோடு, உலக நாடுகளின் பொருளாதாரமும் ஸ்திரத்தன்மை அற்ற சூழலைச் சந்தித்து  வருகின்றது. இந்நிலையில் கச்சா எண்ணெய்த் தேவையைக் காட்டிலும் தயாரிப்பு மற்றும் தேக்கம் அதிகரித்தது. எனவே இதனைச் சரி செய்யும் விதமாக, சவுதி தலைமையிலான ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்வது குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தின.

ஆனால் உற்பத்தியைக் குறைப்பதில் முடிவு எட்டப்படாத சூழலில், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதாகச் சவுதி கடந்த வாரம் அறிவித்தது. சவுதியின் இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 31 டாலர் ஆகக் குறைந்தது. 1991க்கு பிறகு கடந்த 29 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு சரிவைச் சந்தித்தது இதுவே முதல்முறை ஆகும்.

இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யில், சுமார் 83 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அதிலும், சவுதியிடம் இருந்து சராசரியாக மாதத்திற்கு ரூ.13,000 கோடி மதிப்பிலான எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில், சவுதி எண்ணெய் விலையைக் குறைத்தால் இந்தியாவில் எரிபொருள் விலை குறையலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்தச் சூழலில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மூன்று ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எண்ணூர் எண்ணெய்க் கசிவு விவகாரம்; வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Ennore Oil Spill Case Shocking information released

சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய்க் கழிவுகள் படர்ந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு படர்ந்திருக்கும் எண்ணெய்க் கழிவுகளை அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து தாமாக முன்வந்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நடைபெற்ற விசாரணையில், எண்ணூரில் எண்ணெய்க் கழிவு கலந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனப் பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியதோடு, தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘எண்ணூர் கடல் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையே காரணம். சிபிசிஎல் ஆலையிலிருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய்ப் படலம் உருவாகக் காரணம். மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது.

மேலும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் சிபிசிஎல் ஆலையிலிருந்து கசிந்த எண்ணெய் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரபிக் கடலில் வணிகக் கப்பல் மீது தாக்குதல்; நடுக்கடலில் பரபரப்பு

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
incident on a commercial ship in the Arabian Sea!

சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது.  

சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு எம்.வி.செம் என்ற வணிகக் கப்பல் கச்சா எண்ணெய் ஏற்றி வந்தது. அந்த கப்பல் குஜராத் மாநிலம், போர்பந்தர் பகுதியிலிருந்து 217 கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்தபோது கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், கப்பல் தீப்பிடித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் தீ விபத்து ஏற்பட்ட தகவலை அடுத்து கடலோர படையினர் உதவிக்கு விரைந்தனர்.

அங்கு விரைந்த கடலோர படையினர், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். அதன் பின்னர், கப்பலில் இருந்த 20 இந்தியர்கள் உட்படக் கப்பலில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், தீ பற்றியதால் கப்பலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு இந்திய கடற்படை போர்க்கப்பலும் அங்கு விரைந்துள்ளது.

இது குறித்து கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது, “சவுதி அரேபியாவிலிருந்து மங்களூருக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை அதிகாரிகள், அங்கு விரைந்து உதவ புறப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.