Advertisment

ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்துவந்து தேர்வெழுதிய மாணவி!

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இளம்பெண் தேர்வெழுதிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஷபிதா யாதவ். இவர் தன்னுடைய வீட்டில் இருந்தே 12ம்வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படுசுட்டியான அவருக்கு, கடந்த சில வருடங்களாக மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சில வருடங்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடனே அவர்வீட்டில் சுவாசித்து வருகிறார்.

Advertisment

kl

விரைவில் 12ம் வகுப்பு தேர்வெழுத உள்ளதால் தேர்வறையில் சிலிண்டரை எடுத்து செல்ல அனுமதி கேட்டு மாநில அரசிடம் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநில அரசு அனுமதி தந்ததை அடுத்து, இன்று நடைபெற்ற தேர்வில் அவர் சிலிண்டருடன் வந்து கலந்துகொண்டார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், அவருக்கு படிப்பில் இருக்கும் அதீத ஆர்வம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் மேலும் தன்னுடைய படிப்பை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe