நாடு முழுவதும் வெங்காயத்தி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிகார் தலைநகர் பாட்னஈவிலும் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வை கண்டித்து, முன்னாள் எம்.பி.யும், ஜன அதிகார கட்சி நிறுவனருமான பப்பு யாதவ், பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வெளியே இன்று வெங்காயம் விற்றார். ஒரு கிலோ வெங்காயத்தை அவர் 35 ரூபாய்க்கு விற்றார்.
முன்னாள் எம்.பி. வெங்காயம் விற்பதும், அங்கு ஒரு கிலோ வெங்காயம் 35 ரூபாய்க்கு கிடைப்பது குறித்த தகவலும் பாட்னா முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. இதையடுத்து, பப்பு யாதவிடம் வெங்காயம் வாங்க, பாஜக அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.