Advertisment

மருந்து வாங்கியதில் ரூ.150 கோடி ஊழல்... முன்னாள் அமைச்சர் கைது...

ex minister achan naidu arrested

மருத்துவமனைக்குப் பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்கியதில் 150 கோடி ரூபாய் ஊழல்நடைபெற்ற வழக்கில் ஆந்திர எம்.எல்.ஏ.-வும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான அச்சன் நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியிலிருந்த போது, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு ரூ.988 கோடி மதிப்பிலான மருந்துகள் மற்றும் மரச்சாமான்கள் வாங்கப்பட்டன. இதில் ரூ.150 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்த சூழலில், இந்த ஊழிலில் தொடர்புடைய அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் உட்பட 40 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில் இதில் முக்கியக் குற்றவாளிகளான முன்னாள் அமைச்சர் அச்சன் நாயுடு உட்பட 6 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை கைது செய்ய வருவதை அறிந்த அச்சன் நாயுடு அவரது வீட்டின் முன் உள்ள கேட்டை திறக்காததால் காவல்துறை அதிகாரி சுவர் ஏறி உள்ளே சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அச்சன் நாயுடு கைதுசெய்யப்பட்டதை அடுத்து, ஆந்திராவின் பல பகுதிகள் இந்தக் கைதுக்கு எதிரானபோராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Advertisment
Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe