விசாரணையின் போது துன்புறுத்தியதால் கைதி இறந்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ex ips officer sanjiv bhatt sentenced to life in 1990 Jamjodhpur case

கடந்த 1990 ஆம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட், அங்கு நடந்த கலவரத்தின் போது 150 க்கும் மேற்பட்டோரை கைது செய்தார். அதில் விசாரணை முடிந்து விடுதலைசெய்யப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்காக நடந்த இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்த மோடிக்கு எதிராக சாட்சி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிபிடத்தக்கது.