உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள மித்தலி கிராமத்தை சேர்ந்தவர் சேதுராம். முன்னாள் ராணுவ வீரரான இவர் பணி ஓய்வு அடைந்து குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவருக்கு 38 வயதில் மனைவியும், 18 வயதில் மகளும், 13 வயதில் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று சேதுராம் தன்னுடைய மகளை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டு அவரின் வலதுபுற வயிற்றில் பாய்ந்தது. அதை தடுக்க வந்த அவரின் மனைவியையும் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் கீழே விழுந்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதனையடுத்து சத்தம் கேட்டு வந்த தன்னுடைய 13 வயது மகனைஅவர் சுட முயன்றுள்ளார். ஆனால் அப்போது தந்தையின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்த அவருடைய மகள் அவரை துப்பாக்கியால் மார்புப்பகுதியில் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுடப்பட்ட மகள் மற்றும் அம்மாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெ்து விசாரணை மேற்கொண்ட போலிசார், மகளின் காதல் பிரச்சனையே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு காரணம் என்று கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)