raj

Advertisment

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் முடிந்து, வரும் 11 ஆம் தேதி வாக்கு எண்னிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்குள்ள கிஷன்கஞ் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையோரத்தில் கிடந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இதில் தொடர்புடைய மண்டல நீதிபதி உட்பட இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.