PRIYANKA GANDHI VADRA

Advertisment

இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105. 84 ரூபாயாக உள்ளது. மும்பையில் 111.77 ஆக உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நாட்டிலேயேஅதிகபட்சமாக பெட்ரோல் விலை 117.86 ரூபாயாகஉள்ளது.

அதேநேரத்தில்விமான எரிபொருள் விலை ஒரு லிட்டருக்கு 79 ரூபாயாக உள்ளது. இது பெட்ரோல்-டீசல் விலையைவிடசுமார் 30 சதவீதம் குறைவாகும். இதனைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

பெட்ரோல்- டீசல் விலையையும், விமான எரிபொருள் விலையையும்ஒப்பிடும் பத்திரிகை செய்தியின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள அவர், "ஹவாய் செருப்புகள் (ஸ்லீப்பர்கள்) அணிந்த மக்களும் விமானங்களில் பயணம் செய்வார்கள் என்று பாஜக அரசு உறுதியளித்தது. ஆனால் பாஜக அரசு, எரிபொருள் விலையை மிகவும் அதிகரித்துள்ளது. அதனால்இப்போது நடுத்தர வர்க்கத்தினர் சாலையில் பயணம் செய்வதுகூட மிகவும் கடினமாக உள்ளது.