/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/a (8).jpg)
பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமானஅறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான்அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.
மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவமுறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்துதுரதிருஷ்டவசமானது என்றும் அதனைத் திரும்பப் பெற வேண்டும்எனவும் கூறியிருந்தார்.இதனையடுத்துராம்தேவ், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார். இதன்பிறகு ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கடிதத்தில் ராம்தேவ்,அலோபதி மருத்துவம் உயர் இரத்த அழுத்தம், டைப் 1 மற்றும் டைப்2 நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறதா?தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு நவீன மருந்தியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா? என இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கு 25 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில்இந்திய மருத்துவ கூட்டமைப்பு, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை எடுத்துக்கொண்ட பிறகும் 10,000 மருத்துவர்கள் இறந்துவிட்டார்கள் என ராம்தேவ் பேசும் வீடியோவைசுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம்எழுதினர். அதில்தடுப்பூசி குறித்த அச்சமூட்டும் செய்தியை பாபா ராம்தேவ் பரப்புதாகவும், அவர் தங்கள் நிறுவன தயாரிப்புகளின்நலனுக்காக மத்திய அரசின் சிகிச்சை நெறிமுறைகளைஎதிர்ப்பதாகவும் எனவே அவர் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்எனவும் கோரியிருந்தனர். அதன்தொடர்ச்சியாகராம்தேவை கைது செய்யக்கோரி சமூகவலைதளங்களில்ஹஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகின.
இந்தநிலையில்பாபா ராம்தேவ் பேசும் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில்வைரலாகி வருகிறது. அதில் அவர், "எப்படியிருந்தாலும், அவர்களுடைய தந்தையால் கூட சுவாமி ராம்தேவை கைது செய்ய முடியாது.அவர்கள் ‘தக் ராம்தேவ் ’, மகாதக் ராம்தேவ்’, ‘கிராப்டர் ராம்தேவ்’ போன்ற ட்ரெண்டுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அதை செய்யட்டும். இதுபோன்ற ட்ரெண்டுகளை செய்ய மக்கள் பழகிவிட்டார்கள்" என கூறியுள்ளார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூகவலைதளங்களில்அவரைகைது செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)