'Even the hair on the eyebrow has fallen out'

தலைமுடி கொட்டும் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வந்த இளைஞர்அதற்கான மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் பயனளிக்காததால் தன்னுடைய இந்த நிலைக்கு மருத்துவரே காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தலைமுடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுஅவதியடைந்து வந்துள்ளார். இதற்காகக் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ரஃபிக் என்ற மருத்துவரிடம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார் பிரசாந்த். தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் முடி கொட்டுவது நிற்கவில்லை. இதனால் வேதனையடைந்த பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்து, 'மருத்துவர் ரஃபிக் கொடுத்த மருந்துகளால் என்னுடைய புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது. தன்னைப் பார்ப்பவர்கள் கேலி செய்கின்றனர்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். இந்தத்தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment