மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ''தாவுத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளைப் போலீசார் தேடி வருகின்றனர். ஒருவேளைதாவுத் இப்ராஹிம் பாஜகவில் இணைந்துவிட்டால் அவனை ஒரே இரவில் புனிதராக மட்டுல்ல, அமைச்சராகவும் ஆக்கிவிடுவார்கள். ரேஷன் பொருட்களை இலவசமாகத்தருவதாக பிரதமர் கூறுகிறார். சிலிண்டர் விலை இப்படி உயர்ந்தால் எப்படி அவர் கொடுக்கும் இலவச ரேஷன் பொருட்களைச் சமைத்து உண்ணுவது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது'' என விமர்சித்தார்.