தொழிலதிபர் அணில் அம்பானி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

மும்பை மற்றும் டெல்லியில் தொழிலதிபர் அணில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (24.07.2025) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

ராகா நிறுவனங்கள் (RAAGA companies - Reliance Anil Ambani Group Companies) செய்த சட்டவிரோத பண மோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக அனில் அம்பானிக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அணில் அம்பானி மோசடி நபர் எனப் பாரத ஸ்டேட் வங்கி (SBI) அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.