ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரம் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அமலாக்கத்துறையும் அவரை கைது செய்து உள்ளது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ தனிநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவல் முடிந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஐ.என்.எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. எனவே, ப.சிதம்பரத்தை விசாரிக்க மேலும் ஒருவாரம் அனுமதி வழங்கும்படி அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் அக்டோபர் 30 வரை சிதம்பரத்திடம் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியுள்ளது. சிபிஐ விசாரித்து வரும் அதேவழக்கில் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)