
அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.
இந்த வழக்கில் தற்பொழுது 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணீஷ் சிசோடியாவிற்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தமணீஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்பொழுது 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Follow Us