Advertisment

பினராயி விஜயனை வழக்கில் சேர்க்க அமலாக்கத்துறை முயற்சியா? - ஸ்வப்னா சுரேஷ் ஆடியோவால் பரபரப்பு!

Is the Enforcement Department trying to add pinarayi vijayan to the case? Excitement by Swapna Suresh Audio!

Advertisment

கேரளதங்கக்கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ், முதல்வாின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன்,சந்தீப்மற்றும்ரியாஸ் உட்பட 5 போ் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ளனா்.

மேலும், 33 போ் அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளனர். இதில், முக்கியமானவா்களாக கேரளஉயா்கல்வித்துறை மந்திாி ஜலீல் இரண்டு முறை விசாாிக்கப்பட்டுள்ளாா். அதேபோல், கூடுதல் முதன்மைச் செயலாளா் ரவீந்திரன் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில், அவருக்குக் கரோனா தொற்று இருந்ததால் தற்போது அவா்சிகிச்சையில்உள்ளார்.இதனால் அவா் அமலாக்கத்துறை கண்காணிப்பில் உள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரம் அட்டங்குளங்கரை மகளிர் சிறையில் இருக்கும் ஸ்வப்னா சுரேஷின் ஆடியோஒன்று 'தி க்யூவ்' இணையதள சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஸ்வப்னா, "அமலாக்கத்துறை இயக்குனா் என்னை மிரட்டி நெருக்கடி தருவதாகவும்,பினராயிவிஜயனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க வேண்டுமென்றும் அப்படிக் கொடுத்தால் தன்னை அப்ரூவராக்குவதாகவும் கட்டாயப்படுத்துகிறாா். அதேபோல், அவா்களாகவே ஒரு வாக்கு மூலத்தை தயாாித்து அதை என்னைப் படிக்கக் கூட விடாமல் கையெழுத்தை மட்டும் வாங்கித் தாக்கல் செய்து இருக்கிறாா்கள்.

Advertisment

மேலும், துபாயில் பினராயிவிஜயனுக்கு கமிஷன் கொடுப்பது சம்மந்தமாக நானும் சிவசங்கரனும் பேசிக் கொண்டதாகவும் ஒரு வாக்குமூலத்தைக் கேட்டனா். இதை நான் சம்மதிக்கவில்லை"என அந்த ஆடியோவில் பேசியுள்ளாா். இது அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படு்தியுள்ளது. இந்நிலையில், பினராயிவிஜயன் தன்னையையும்,தன்னுடைய மந்திாிகளையும் காப்பாற்றுவதற்காகத்தான் இப்படித் திட்டமிட்டுச் சித்தாிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளாா். சிறையில் பாதுகாப்போடு இருக்கும் ஸ்வப்னாவால் எப்படி இந்த மாதிாி ஆடியோவை வெளியிட முடியும்என்று பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையில், ஸவப்னா 10 வாா்த்தைகளில் 9 வாா்த்தைகள் ஆங்கிலத்தில் தான் பேசுவார்முழுக்க முழுக்க மலையாளத்தில் பேசுவது கிடையாது. ஆனால், இந்த ஆடியோ முழுவதும் மலையாளத்தில் தான் பேசப்பட்டுள்ளது. எனவே, இது ஸ்வப்னாவின் குரல் இல்லையென்று அமலாக்கத்துறையினர்கூறியுள்ளனர்.

audio Kerala Pinarayi vijayan Swapna suresh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe