Enforcement department summons Rahul Gandhi again

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கினார். இதில் 5,000க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு மற்றும் சில பத்திரிகைகளும் வெளியாகின. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போக, நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அந்த நாளேடு நிறுத்தப்பட்டது. அதன்பின் 2010ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பங்குகள் 50 லட்சம் ரூபாய்க்கு ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டபோது அதில் முறைகேடு நடந்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கில் நேற்றைய தினத்தில் ஆஜராகக்கோரி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்த நிலையில், வரும் 13ஆம் தேதி ஆஜராகக்கோரி ராகுல் காந்திக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.