Advertisment

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

Enforcement department probes actress Tamannaah

செல்போன் செயலி விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். 'எச் டி இஸட் டோக்கன்' என்ற நிறுவனம் சட்டவிரோதபணப்பரிமாற்ற வழக்கில் சிக்கிய நிலையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் எச் டி இஸட் டோக்கன் செல்போன் செயலி விளம்பரத்தில் தமன்னா நடித்திருந்தார்.

Advertisment

விளம்பரத்தில் நடித்திருந்த நடிகை தமன்னாவிடமும் அமலாக்கத்துறை ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பிட் காயின் போன்ற கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யலாம் என பணம் மோசடி செய்ததாக எச் டி இஸட் டோக்கன் நிறுவனம் மீது புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்கஅசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை நடிகை தமன்னாவுக்கும் சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில் பெற்றோருடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று பிற்பகல் தமன்னா ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Advertisment
Actress thamana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe