Skip to main content

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை 

Published on 02/06/2022 | Edited on 02/06/2022

 

Enforcement action on the Popular Front of India

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ள நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள் மற்றும் ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் என மொத்தம் 33 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் இந்த அமைப்புகளுக்குச் சொந்தமான ரூ.68.62 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. 

 

குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் அமைப்போடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு தொடர்புகள் இருப்பதாகக் கூறி இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ சோதனை; மேலும் 5 பேர் கைது

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

NIA raid conducted in Tamil Nadu; 5 more arrested

 

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 10 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சென்னையில் திருவொற்றியூர், ஓட்டேரியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கும் நபர்களின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நேதாஜி நகரில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதேபோல் மதுரையில் நெல்பேட்டை, வில்லாபுரம், தெப்பக்குளம் பகுதியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

தேனி கம்பம்மெட்டு காலனியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளர் சாதிக் அலி வீட்டில் சோதனை நடைபெற்றது. சார்ஜாவில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த தஞ்சையைச் சேர்ந்த பயணி முகமது அசாப்பிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமிலும் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

 

இந்த சோதனையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்துல் ரஸாக், முகமது யூசுப், முகமது அப்பாஸ், கெய்ஸர், சாதிக் அலி ஆகியோர் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் டிஜிட்டல் ஆயுதங்கள், ஆவணங்கள், சட்ட விரோத ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Next Story

கோவையில் பிஎப்ஐ அலுவலகங்களுக்கு சீல்!

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

PFI offices in Coimbatore sealed

 

பாப்புலர் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட்  ஆப்  இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசும் அதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது.

 

கடந்த அக்.1 ஆம் தேதி சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள  பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. புரசைவாக்கம் மண்டல உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தலைமையில் வந்த போலீசார் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள தடைசெய்யப்பட்ட இயக்கமான  பாப்புலர் ஃபிரண்ட்  ஆப் இந்தியாவின் அலுவலகங்களுக்கு சீல்வைக்கப்பட்டு வரும் நிலையில் கோவையில் இரண்டு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.   கோவை கோட்டைமேடு மற்றும் வின்சென்ட் ரோட்டில் இருந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களுக்கு வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்.