உலகம் முழுவதும் கரோனா பீதி உச்சத்தில் இருக்கின்றது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தாக்குதல் ஐரோப்பிய நாடுகளை தீவிரமாக பாதித்து வருகின்றது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு உச்சத்தில் இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை 600க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Advertisment
Advertisment

இதன் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றது. ஆந்திராவில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் இளைஞர்கள் வாகன ஓட்டிகள் யாரும் வராததால் பெட்ரோல் பங்கின் உள்ளே கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோ இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.