ADVERTISEMENT

12 வயதுக்கும் மேற்பட்டோருக்கான புதிய கரோனா தடுப்பூசி - சில நாட்களில் அனுமதியளிக்கவுள்ள இந்தியா!

11:36 AM Jul 12, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் v, மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனம், தான் உருவாகியுள்ள ‘ஸைகோவி-டி’ என்ற தடுப்பூசிக்கு அனுமதி கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்திருந்தது.

இந்தநிலையில், ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்க மேலும் சில நாட்கள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸைகோவி-டி தடுப்பூசியைக் கொண்டு மூன்றுகட்ட சோதனைகளை நடத்தி முடித்துள்ள ஸைடஸ் காடிலா நிறுவனம், தங்களது தடுப்பூசி 12 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டோருக்குப் பாதுகாப்பானது என ஏற்கனவே கூறியுள்ளது. மேலும் மூன்றாவது கட்ட ஆய்வின் இடைக்கால தரவுகளின்படி, தங்கள் தடுப்பூசிக்கு 66.6% சதவீத செயல்திறன் இருப்பதாகவும் ஸைடஸ் காடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் இந்த ஸைகோவி-டி தடுப்பூசி, மொத்தம் மூன்று டோஸ்களைக் கொண்டதாகும். முதல் டோஸ் செலுத்தப்பட்ட 28வது நாளில் இரண்டாவது டோஸையும், 56வது நாளில் மூன்றாவது டோஸையும் செலுத்திக்கொள்ளலாம். டி.என்.ஏ பிளாஸ்மிட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உலகின் முதல் கரோனா தடுப்பூசி இதுவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT