Advertisment

11-ஆவது கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி! 

farmer

Advertisment

3 வேளாண் சட்டங்களையும்திரும்பப்பெற வேண்டும்என விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், விவசாயச் சங்கத்துடன் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் ஆகியோர் இன்று பதினோராவது கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 'வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக'ஏற்கனவே மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisment

மத்திய அரசின் பரிந்துரையை விவசாயிகள் ஏற்க மறுத்த நிலையில், 11-வது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. டெல்லிவித்யான்பவனில் சரியாக 12 மணி அளவில்பேச்சுவார்த்தை நடைபெற்றது.கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்தாவது கட்டப் பேச்சுவார்த்தையில் "வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இது தொடர்பாக ஆலோசித்து (இன்றைய தினம்) 11வது கட்டப் பேச்சுவார்த்தையில் தெரிவியுங்கள்" என விவசாயச் சங்கங்களுக்குமத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் முடிவுஎட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

bill Central Government Farmers
இதையும் படியுங்கள்
Subscribe