கால்வாயை கடக்க முயன்ற யானை ஒன்று அதற்கு வழியில்லாத காரணத்தால்அங்கு அமைக்கப்பட்டிருந்த படிகளில் ஏறிச்சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான பரவீன் கஸ்வான் விலங்குகள், காடுகள் தொடர்பான வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில் யானை ஒன்று கால்வாயில் நீர் அருந்திவிட்டு மேலே செல்ல வழியில்லாததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய படிக்கட்டின் வழியாக மேலே சென்றது. இந்த வீடியோவை வெளியிட்டுள்ள பர்வீன் கஸ்வான், " யானைக்கு வேறு வாய்ப்புகள் இல்லாத நிலையில் அது படிக்கட்டுகளை பயன்படுத்துகிறது. அந்த யானையின் கடைசிப் பார்வை நிறைய உணர்த்துகிறது" என்று தன்னுடைய பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.