வாகனஓட்டி ஒருவர் காட்டு யானையிடம் இருந்து தப்பிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், காட்டு யானைகூட்டம் ஒன்று சாலையின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறம் கூட்டமாக செல்கிறது. அப்போது, ஒரு யானை மட்டும் செல்லாமல் சாலையின் மற்றொரு புறத்திலேயே நின்றது. இதனால் சாலையை கடக்க இருந்த வாகன ஓட்டிகள் சாலையின் ஒருபுறத்தில் ஓரமாக நின்று கொண்டனர்.

Advertisment
Advertisment

ஆனால், மற்றொரு யானை சாலையை கடக்காமல் நீண்ட நேரம் நின்றதால், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மட்டும், சாலையை விரைவாக கடக்கும் நோக்கில் யானை இருந்த திசையில் வாகனத்தை விரைவாக இயக்கியுள்ளார். அப்போது திடீரென யானை சாலையை நோக்கி வரவே, பயந்து போன அவர், வாகனத்தை மேலும் வேகமாக இயக்கியுள்ளார். இன்னும் சில நொடிகள் அவர் தாமதமாக அந்த இடத்திற்கு வந்திருத்தார் என்றால் யானையிடம் அவர் சிக்கியிருப்பார். இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வரைலாகி வருகின்றது.