elephant sleeps listening Ilayaraja song

தூக்கமின்றி தவித்த யானையை இளையராஜா பாட்டை பாடி தூங்க வைக்கிறார் பாகன்.

Advertisment

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விஜய்சுந்தர் என்ற யானையை வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக யானை தூக்கம் இல்லாமல் தவித்து வந்தது. இதனை கண்ட பாகன், குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பது போல மலையாள பாடல் ஒன்றை பாடி தூங்க வைக்கிறார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா இசையில் மலையாளத்தில் மம்முட்டி நடித்து 1984ல் வெளிவந்த மங்களம் நேருன்னு என்ற படத்தில் வரும் 'அல்லியிளம் பூவே' என்ற பாடலைத்தான் பாகன் பாடுகிறார்.