ADVERTISEMENT

தடம் மாறிய பேருந்தை தடுத்து நிறுத்திய யானை..? வைரல் போட்டோவிற்கு விடை இதோ..!

06:14 PM Sep 04, 2019 | suthakar@nakkh…

இரண்டு நாட்களுகத்கு முன்பு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் அன்று மதியம் உத்தரகாண்டில் ஒரு யானை, பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை காப்பாற்றியது போல் ஒரு புகைப்படம் வலம் வந்தது. அந்த புகைப்படத்தை அனைவரும், “ஜெய் ஸ்ரீ கணேஷா, கணபதி பாபா மோரியா” என குறிப்பிட்டு பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தின் உண்மை பின்னணி தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்த புகைப்படம் உத்தரகாண்டில் எடுத்தது இல்லை எனவும், இது 2007 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் கவிழ்ந்து கிடந்த பேருந்தை, ஒரு யானை மூலம் மீட்கப்பட்டபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்த புகைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு, ”ஜன் ஜன் டக்” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், ”ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்தை நிறுத்தி 47 பேரை காப்பாற்றிய யானை. கணபதி பாபாவின் இந்த அவதாரத்திற்கு ஒரு லைக் செய்ய்யுங்கள்."கணபதி பாபா மோரியா" என்று ஹிந்தி மொழியில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இது உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்ததுபோல் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT