சாலையின் குறுக்கே வந்து வாகனத்தை வழிமறித்த யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கர்நாடக மாநிலம் அம்லி அருகில் சரக்கு லாரி ஒன்று பொருட்களை ஏற்றிக்கொண்டு நாகர் ஹோலி பூங்காவிற்கு அருகில் சென்றுள்ளது. அப்போது சாலையின் குறுக்காக வந்து நின்ற யானை ஒன்று வாகனத்தை துரத்த ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டி வாகனத்தை பின்புறமாக இயக்கியுள்ளார்.
இருந்தும்யானை வாகனத்தை தொடர்ந்து துரத்தி வந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. கடந்த வாரம் மாண்டியாவில் கரும்பு லாரியை மறித்தயானைகள்பொருட்களை சூறையாடிய நிலையில் இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.